,தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலத்திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக ஃபிஜி சுற்றுலாத்துறை அமைச்சர் பாராட்டு

,தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலத்திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக ஃபிஜி சுற்றுலாத்துறை அமைச்சர் பாராட்டு

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும், நீண்டகால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாகவும், ஃபிஜி தீவுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர் Faiyaz Siddic Koya பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஃபிஜி நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, ஃபிஜி நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வந்த இக்குழுவினர், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் உரையாடி, கருத்துக்கள் கேட்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபிஜி சுற்றுலாத்துறை அமைச்சர் Faiyaz Siddic Koya, முதலமைச்சர்  ஜெயலலிதா, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.