அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் : மதுரை ஆதினம் அறிவிப்பு

அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் : மதுரை ஆதினம் அறிவிப்பு

ஞாயிறு, ஏப்ரல் 24,2016,

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்வதாக மதுரை ஆதினம் அருணகிரி நாதர் ஞானசம்பந்த தேசிகர் கூறினார்.
 சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது அரசியல் நிலவரம் குறித்து பேசவில்லை. அதேநேரம் சன்னிதானத்தின் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
 பெண்ணாக இருந்து பல்வேறு எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி பெற்றுள்ளார். அதனாலேயே எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம். ஏழைகள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். அதிமுக வெற்றிக்காக நாள்தோறும் பூஜையும், பிரார்த்தனையும் செய்து வருகிறோம். அதைத் தொடர்ந்து, முதல்வர் குறிப்பிடும் நாளில் பிரசாரத்திலும் ஈடுபடுவேன்.என்று மதுரை ஆதினம் கூறினார்.