அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு : பிற்படுத்தப்பட்டோர் பேரவை அறிவிப்பு

அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு : பிற்படுத்தப்பட்டோர் பேரவை அறிவிப்பு

புதன், மார்ச் 02,2016,

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் முதல்வர் ஜெயலலிதா கரத்தை வலுப்படுத்த நடைபெறவுள்ள 2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது என புவனகிரியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் முடிவு எடுத்துள்ளோம். அதனடிப்படையில் ஏப்ரல் முகல் வாரத்திலிருந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளோம். இப்பிரசாரம் எனது தலைமையில் 50 பேர் கொண்ட பிரசாரக்குழு தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் சாதனை விளக்கி பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா ஆட்தியில் அமருவது உறுதி என அறிக்கையில் வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.