வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு : தீரன் சின்னமலை பேரவை முடிவு

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு : தீரன் சின்னமலை பேரவை முடிவு

திங்கள் கிழமை,மார்ச் 14,2016,

மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் மாநில செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம், திருப்பூரில்  நடைபெற்றது. மாநிலத் தலைவர் கே.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அவிநாசி – அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம், மாநில பொதுச் செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை, அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் என்றார்.