அதிமுகவுக்கு கிறிஸ்தவ மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு : அமைப்பின் தலைவர் பிரின்ஸ் ஜெ.சுந்தர் அறிவிப்பு

அதிமுகவுக்கு கிறிஸ்தவ மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு : அமைப்பின் தலைவர் பிரின்ஸ் ஜெ.சுந்தர் அறிவிப்பு

செவ்வாய், ஏப்ரல் 12,2016,

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கிறிஸ்தவ மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பிரின்ஸ் ஜெ.சுந்தர், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித யாத்திரைக்கு அதிமுக அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலித் மக்கள் சுய விருப்பத்தின்படி கிறிஸ்தவத்தைப் பின்பற்றினால் அவர்களது சலுகைகளை நிராகரிக்கக் கூடாது என்பதை ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் மூலம் நாடாளுமன்றம் வரை கொண்டு சென்றது அதிமுக தலைமையிலான அரசு.எனவே, கிறிஸ்துவ மக்களின் நன்மைக்காகப் பாடுபடும் அதிமுகவுக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் கிறிஸ்தவ மக்கள் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு தெரிவிக்கிறது என்றார்.