அதிமுக அமைப்புச் செயலராக நத்தம் விஸ்வநாதன் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக அமைப்புச் செயலராக நத்தம் விஸ்வநாதன் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஜூன் 16,2016,

அதிமுக அமைப்புச் செயலர்களாக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா  வெளியிட்டார்.

திண்டுக்கல் மாவட்டச் செயலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நத்தம் விஸ்வநாதன் அமைப்பு செயலராகவும், செய்தித் தொடர்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், செய்தித் தொடர்பாளர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.