அதிமுக அமைப்புச் செயலாளாராக பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் நியமனம்

அதிமுக அமைப்புச் செயலாளாராக பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் நியமனம்

திங்கள், 23 நவம்பர் 2015

அதிமுக அமைப்புச் செயலாளாராக பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவின் புதிய நி்ர்வாகிகளை தமிழக முதல்வரும், அதிமுக  பொது செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  அதில், தேமுதிகவில் இருந்து தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்த பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனுக்கு, அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார்.

அது போல, ஸ்ரீரங்கம் சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதிக்கும், மேலும், இதுவரை ஒதுக்கிவைக்கப்பட்டு இருந்த பொன்னையனுக்கும் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.