அதிமுக ஒரே இயக்கமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை தீபா ஏற்க வேண்டும் : பாண்டியராஜன் வேண்டுகோள்

அதிமுக ஒரே இயக்கமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை தீபா ஏற்க வேண்டும் : பாண்டியராஜன் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, மார்ச் 03, 2017,

சென்னை : அதிமுக பிரியாமல் ஒரே இயக்கமாக செயல்படுவதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை தீபாவும், அவரது ஆதரவாளர்களும் ஏற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கேட்டுக் கொண்டார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
தற்போதைய நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வரவேற்கிறோம். ஏற்கெனவே இரு கரங்களாக நாங்கள் (ஓபிஎஸ், தீபா) செயல்படுவோம் என மறைந்த ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா கூறினார். தற்போது அதை நினைவு கூருகின்றோம்.எங்களைப் பொருத்தவரையில் அதிமுக ஒரே இயக்கமாக செயல்பட வேண்டும்.தீபா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவிப்போர் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று பாண்டியராஜன் கூறினார்.