அதிமுக ஒவ்வொரு தொண்டனின் சொத்து அதை யாரும் கைப்பற்ற விடமாட்டோம் : முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

அதிமுக ஒவ்வொரு தொண்டனின் சொத்து அதை யாரும் கைப்பற்ற விடமாட்டோம் : முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

சனிக்கிழமை, பிப்ரவரி 11, 2017,

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும் போது  எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அதிமுக என்ற இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் என்று மாண்புமிகு அம்மா கூறியிருந்தார்.அந்த இயக்கத்தை ஒரு குடும்பத்தினர் கைப்பற்ற விடமாட்டோம். அதிமுக ஒவ்வொரு தொண்டனின் சொத்து அதை யாரும் கைப்பற்ற விடமாட்டோம். அதைக் கைப்பற்றலாம் என்று எண்ணுவோரின் கனவு பலிக்காது.

நான் ஏற்கனவே சொன்னேன்.நல்லது நடக்கும். தர்மத்தின் வாழ்வு தனை சூதுகவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும். மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறினார்.

அதை தொடர்ந்து பேசிய அவைத் தலைவர் மதுசூதனன், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இன்று நாங்கள் இந்த அறப்போராட்டத்தை எடுத்துக் கொண்டுள்ளோம்.அந்த பணியை தொடர்ந்து செய்வோம். குடும்ப அரசியலுக்கு எதிராக எம்.ஜி.ஆரா. துவங்கப்பட்ட இந்த இயக்கம் இன்னொரு குடும்ப ஆதிக்கத்திற்குள் சென்று விட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.  

மேலும் கட்சியை காப்பாற்ற பாடுபட்டு வரும் பன்னீர் செல்வத்துக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.