அதிமுக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்கள்: பிப். 10-இல் முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்

அதிமுக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்கள்: பிப். 10-இல் முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்

திங்கள் , பெப்ரவரி 01,2016,

அதிமுக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 11 மணிக்கு கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா நடத்திவைக்கிறார்.

திருமணம் நடைபெறும் கட்சியினர் விவரம் குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் மகள், திருவாரூர் மாவட்டச் செயலரும், உணவு-இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான ஆர்.காமராஜின் மகன், தூத்துக்குடி மாவட்டச் செயலரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகள், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியனின் மகன், எம்எல்ஏக்கள் பி.கே.வைரமுத்துவின் மகள், கே.பி.முனுசாமியின் மகன், புத்திசந்திரனின் மகள், கோவி.சம்பத்குமாரின் மகன், வே.குணசீலனின் மகன், மு.வி.கருப்பையாவின் மகள், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர் கே.ராஜனின் மகள், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரனின் மகன், வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ஜி.கே.தனஞ்செழியன், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலின் மகள்.