அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி

வெள்ளி,டிசம்பர் 30,2016,

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா சென்னை மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி  உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அக்கட்சியின் புதிய பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் சசிகலா இன்று மாலை சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று மாலை அஞ்சலி செலுத்தினார்.

நினைவிடத்திற்கு வந்த அவர் முதலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நினைவிடத்தை வலம் வந்து வணங்கினார். அவருடனமுதல்வர் ஓ .பன்னனீர்செல்வம்,மற்றும் அமைச்சர்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.