அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு : அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு : அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

வியாழன்,டிசம்பர் 29,2016,

சென்னை: இன்று காலை சென்னை வானகரத்தில் துவங்கிய அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

அதிமுக பொதுச் செயலராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, உடல்நிலைக் குறைவு காரணமாக டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அதிமுக பொதுச் செயலராக, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவை பதவியேற்றுக் கொள்ளுமாறு கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன் மொழிந்தார்.