அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கம் ; பொது செயலாளர் சசிகலா அறிவிப்பு

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கம் ; பொது செயலாளர் சசிகலா அறிவிப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 08 , 2017, 

சென்னை : அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருக்கும்  ஓ. பன்னீர்செல்வம், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருக்கும்  ஓ. பன்னீர்செல்வம், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.பொருளாளர் பொறுப்பில், வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சி. சீனிவாசன் நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ள சசிகலா கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொண்டுள்ளார்.