அதிமுக பொறுப்பாளர்கள் மாற்றம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக பொறுப்பாளர்கள் மாற்றம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, மார்ச் 12,2016,

தென் சென்னை தெற்கு, தேனி மாவட்டங்களைச் அதிமுக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலவிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில்,

சென்னையில்..: தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலராக பொறுப்பில் இருக்கும் எம்.எம். பாபு அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் ஏற்கனவே வகித்து வரும் ஜெயலலிதா பேரவையின் மாவட்டத் தலைவராகத் தொடர்ந்து செயலாற்றுவார்.

தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலராக, தமிழ்நாடு பஞ்சாலைக்கழகத் தலைவரான விருகை வி.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனியில்..: தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் பொறுப்பில் இருக்கும் வரதராஜன், மாவட்ட மாணவர் அணிச் செயலர் ஜெகதீஸ், ஆண்டிபட்டி ஒன்றியத்தின் மாவட்டப் பிரதிநிதி ராஜ்குமார் ஆகியோர், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலராக ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்க.தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலராக அழகாபுரியைச் சேர்ந்த ராஜ்குமார், மாணவரணி மாவட்டச் செயலராக பங்களாமேட்டைச் சேர்ந்த செல்வம், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலராக, நாச்சியார்புரத்தைச் சேர்ந்த வரதராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்கேட்டுக்கொண்டுள்ளார்.