அதிமுக மகளிர் அணி செயலாளராக அமைச்சர் கோகுல இந்திரா நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக மகளிர் அணி செயலாளராக அமைச்சர் கோகுல இந்திரா நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஜனவரி 07,2016,

சென்னை : அதிமுக மகளிர் அணி செயலாளராக அமைச்சர் கோகுல இந்திராவை நியமனம் செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

அதிமுக மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் சசிகலா புஷ்பா எம்.பி., அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.கோகுல இந்திரா அவரவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அதிமுக மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் கைத்தறித்துணிநூல் துறை அமைச்சரும் கழக மனுக்கள் பரிசீலனை குழு உறுப்பினருமான கோகுல இந்திரா இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார்.