அதிமுக வெற்றிக்காக சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும் :எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

அதிமுக வெற்றிக்காக சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும் :எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

திங்கள் , மார்ச் 21,2016,

அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.

செங்குன்றத்தை அடுத்த புழல் பகுதியில் சமத்துவ மக்கள் கழக ஆலோசனைக் கூட்டம் அதன் மாவட்டச் செயலாளர் முனீஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் கண்ணன், தங்கமுத்து, விநாயகமூர்த்தி, கராத்தே ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேசியதாவது:

234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு திரட்டும். மேலும் சமத்துவ மக்கள் கழகத்தினரும் தேர்தலில் போட்டியிட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம்.

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதே சமத்துவ மக்கள் கழகத்தின் முக்கிய குறிக்கோளாகும் என்றார்.

இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கூட்டத்தில் மணலி டி.பாலசேகர், பஞ்சவர்ணம், சண்முகராஜ், மதுரைவீரன், கார்த்திகை கனி, கிருஷ்ணவேணி, பிரபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.