அப்பர் – அமராவதி நீர்மின் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: நத்தம் விஸ்வநாதன்

அப்பர் – அமராவதி நீர்மின் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: நத்தம் விஸ்வநாதன்

வெள்ளி, பெப்ரவரி 19,2016,

அப்பர் – அமராவதி நீர்மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் தொடர்பு கொண்டு சிறப்பு அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது அப்பர் – அமராவதி நீர்மின்திட்டம் தொடர்பாக, மடத்துக்குலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகவேல் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அப்பர்-அமராவதி நீர்மின் திட்டம் வன பகுதியில் உள்ளதால், மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டம் குறித்து, முதலமைச்சரின் ஆலோசனையை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.