அப்பல்லோ மருத்துவமனையில் தொலைக்காட்சியில் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை பார்த்த முதல்வர் ஜெயலலிதா உற்சாகம்

அப்பல்லோ மருத்துவமனையில் தொலைக்காட்சியில் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை பார்த்த முதல்வர் ஜெயலலிதா உற்சாகம்

செவ்வாய், நவம்பர் 22,2016,

சென்னை,

தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா உற்சாகமாக காணப்பட்டார். முன்னதாக, தொலைக்காட்சி மூலம் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தையும் அவர் பார்த்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனி அறையில் இருந்தபடி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் முடிவை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றது முதல், வெற்றி பெற்றது வரை வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அவர் கண்காணித்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் அவர் மகிழ்ச்சியடைந்து, உற்சாகமாக காணப்பட்டார்.

 

 

பின்னர் தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது;

                                                மூன்று தொகுதி வெற்றியின் மூலம் மக்கள் தனது பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தனது பணிகள் எப்போதும் சிறப்புடன் தொடரும் எனவும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.