அமைதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சையத்: முதலமைச்சர் ஜெயலலிதா புகழஞ்சலி

அமைதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சையத்: முதலமைச்சர் ஜெயலலிதா புகழஞ்சலி

வெள்ளி, ஜனவரி 08,2016,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவற்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முதல்வர் முப்தி முகம்மது சையத் என முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முப்தி முகமது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உயர்ந்த தலைவர்களின் ஒருவரான முப்தி முகம்மது சையீத், அம்மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.

அவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவற்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்

அவரது மறைவால் இந்த தேசம் ஒரு பெருந்தலைவரையும், ஒப்பற்ற அரசியல்வாதியையும் இழந்துவிட்டது. அவரை இழந்து வாடும் அவரது மகள் மெகபூபா முப்தி சையது மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனமுதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.