”அம்மா இலக்கிய விருது” ஆண்டுதோறும் ஒரு பெண் எழுத்தாளருக்கு வழங்கப்படும்

பெண் எழுத்தாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் நடப்பாண்டு முதல் இலக்கிய பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது என்ற புதிய விருது சித்திரை தமிழ்ப்புத்தாண்டு நாளில் வழங்கப்படும் என்றும், அதன்படி விருது பெறுபவருக்கு 1 லட்ச ரூபாய் பண முடிப்பு, தகுதி உரையும் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Arputham-Ammal-mother-of-Perarivalan-one-of-the-assassins-of-former-prime-minister-Rajiv-Gandhi-meets-Tamil-Nadu-Chief-Minister-Jayalalithaa

இது தவிர, தரமான பிற மொழி படைப்புகளை சிறந்த மொழியில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் புகழை பரப்பிடும் வகையில் அவரின் 125 வது பிறந்தநாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு 2 நாள் கவியரங்கம் ரூபாய் 5 லட்சம் செலவில் நடத்தப்படும் என்றும், பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் கவிஞர் நாள் என்ற பெயரில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.