முதலமைச்சர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு – வேலூர் மாநகராட்சியில் மூன்று அம்மா உணவகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

முதலமைச்சர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு – வேலூர் மாநகராட்சியில் மூன்று அம்மா உணவகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

சனி , ஜனவரி 09,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் மகத்தான மக்கள் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகம், வேலூரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக I.S.O தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஏழை-எளிய நடுத்தர மக்கள் மலிவு விலையில் சுகாதாரமான மற்றும் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அம்மா உணவகங்கள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வேலூர் நகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் இதுவரை 45 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உணவு சாப்பிட்டு பயனடைந்துள்ளனர். இந்த உணவகங்களை 6 மாதங்களுக்கு முன்பு I.S.O. குழுவினர் ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலூர் மாநகராட்சி, அண்ணாசாலை மற்றும் பாரதியார் நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு I.S.O 9001-2008 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை, I.S.O இயக்குநர் திரு. B. கார்த்திகேயனிடமிருந்து, வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி. கார்தியாயிணி பெற்றுக்கொண்டார்.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களை ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் நேரில் பார்வையிட்டு, தங்கள் பகுதிகளிலும் இதேபோன்று உணவகங்களை தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர்.