‘அம்மா கல்வியகம்’ சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

‘அம்மா கல்வியகம்’ சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஜூன் 14, 2017,புதன் கிழமை,

சென்னை : ‘அம்மா கல்வியகம்’ மூலம் ஐஏஎஸ் அகாடமி விரைவில் தொடங்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அம்மா கல்வியகத்தோடு இணைந்து படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், ”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், மாநிலத்தின் சொந்த வருமானமான ரூ.86 ஆயிரம் கோடியில் ரூ.27 ஆயிரம் கோடியை கல்வித்துறைக்காக மட்டும் ஒதுக்கினார். இதன் மூலம், ஏழை மாணவர்களுக்காக 16 வகையான உபகரணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கினார்.

தற்போது திறன் மேம்பாட்டு பயிற்சி அனைத்து மாணவர்களுக்கும் தேவைப்படுகிறது. எனவே, ‘அம்மா கல்வியகம்’ மூலம் விரைவில் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும். அதேபோல, வங்கி அதிகாரிகள் பணிக்கான தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு உள்ளிட்டவற்றுக்கும் பயிற்சி அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.