அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், 10 கோடி ரூபாய் செலவில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் ஆகிய திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மேலும், 207 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, 21 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவைகளையும், 385 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அம்மா ஆரோக்கிய திட்டம் மற்றும் 3 கோடி ரூபாய் செலவில் கையடக்க கருவி மூலம் வாய் புற்றுநோய் கண்டறியும் திட்டங்களையும் துவக்கி வைத்து, 458 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்  மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப்படும் என்றும், முழு உடல் பரிசோதனைக்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்றும்  முதல்-அமைச்சர்  ஜெயலலிதா  சட்டப்பேரவையில் அறி வித்தார்.
அதன்படி, முன்னோடித் திட்டமாக, 10 கோடி ரூபாய் செலவில், சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்  மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோ தனை திட்டம் ஆகிய திட்டங்களை முதல்-அமைச்சர்  ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தில் முழு ரத்தம், சிறுநீரகம், ரத்த சர்க்கரை, ரத்தக் கொழுப்பு, கல்லீரல் செயல்பாடு, ஹெப்படைடிஸ் பி ரத்த பரிசோதனை, ரத்த வகை மற்றும் ஆர்.எச். ஆகிய பரிசோதனைகள், நெஞ்சு சுருள் படம், நெஞ்சு ஊடுகதிர் படம், மிகையலி, இதய மீள் ஒலி, தைராய்டு ரத்தம், மற்றும் சிறப்பு சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும்.
அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தில், மேற்கண்ட அனைத்து பரிசோ தனைகளுடன் கூடுதலாக கருப்பை முகைப் பரிசோதனை, மார்பக எண்ணியல் ஊடு கதிர்ப்பட பரிசோதனை, எலும்பு திறனாய்வு பரிசோதனை, ரத்த வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பாரா தைராய்டு ஹாய்மோன் பரிசோதனை ஆகியவைகள் செய்யப்படும்.  இந்தத் திட்டத்தில் மூன்று விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்; அம்மா கோல்ட் பரிசோதனைக்கு 1,000 ரூபாயும், அம்மா டைமண்ட் பரிசோதனைக்கு 2,000  ரூபாயும், அம்மா பிளாட்டினம் பரிசோதனைக்கு 3,000 ரூபாயும்  கட்டணமாக வசூலிக்கப்படும்.

மாநிலத்திலுள்ள அனைத்து 385 வட்டார அளவிலான மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வாரத்தில் இரு நாட்கள் பொதுமக்கள் சென்று, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், சர்க்கரை நோய் கண்டறிதல், இரத்த அழுத்தம், இ.சி.ஜி. கொலஸ்ட்ரால், கண் பரிசோதனை போன்ற அனைத்து அடிப்படை பரி சோதனைகளும் கட்டண மில்லாமல் செய்து கொள் ளும் வகையில் ‘அம்மா ஆரோக்கியத் திட்டம்’  முதல்-அமைச்சர்  ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 61 கோடியே  58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவு கட்டடம்; சேலம் – அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மைய கட்டடம்;  சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவிற்கான ஒப்புயர்வு மையக் கட்டடம், ஒருங்கிணைந்த தீவிர மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு கட்டடம் மற்றும் உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவுக் கட்டடம்;

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 3 கோடியே 30 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அணு மருந்து துறைக்கு அறைகள், நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் காத்திருப்போர் அறை; மருத்துவக் கல்வி இயக்கக கட்டடத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள் மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 78 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவர் குடியிருப்பு;
ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 50 படுக்கைகள் கொண்ட மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம்; போடிநாயக்கனூர், ஆரணி, திருத்தங்கல், பத்மநாபபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள்; நாமக்கல், உதகமண்டலம், திருப்பூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட தலைமை  மருத்துவமனைகள் ஆகிய அரசு மருத்துவமனைகளில் 26 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்கள்;

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்கள்) பயிற்சி மையக் கட்டடம், கோயம்புத்தூர், கடலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 13 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள், கோயம்புத்தூர், தருமபுரி, காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 26 புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள், கோயம்புத்தூர், கரூர், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 14 துணை சுகாதார நிலைய கட்டங்கள், கோயம்புத்தூர், கடலூர், திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு கட்டடங்கள்,

கடலூர், மதுரை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 11 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டப்பட்டுள்ள செவிலியர் களுக்கான குடியிருப்புகள் மற்றும் விழுப்புரம் மாவட்டம், கரியாலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 மருத்துவ அலுவலர் குடியிருப்பு கட்டடங்கள், என மொத்தம் 35 கோடியே 17 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவத் துறை கட்டடங்கள்;

இந்திய முறை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, சென்னை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ மருத்துவமனை வளாகத்தில் 18 கோடியே  85 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட கட்டடம், சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனைக்கு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ பிரிவிற்கான கட்டடம்,

சென்னை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரிக்கு விலங்கியல் கூட கட்டடம் மற்றும் குணப்பாட பிரிவிற்கான கட்டடம், சென்னை, அரசினர் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டடம், சென்னை, அரசினர் யுனானி மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் துறை மற்றும் வகுப்பறைகளுக்கான கட்டடம் மற்றும் சென்னை, அரசினர் சித்த மருத்துவக் கல்லூரிக்கான மூலிகைத் தோட்டம்; என மொத்தம் 207 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை  ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதியதாக அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 458 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கல்லூரிக் கட்டடங்கள் மற்றும் மருத்துவமனை கட்டடங்களுக்கு  ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 266 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 கோடி ரூபாய் செலவில் கையடக்க கருவி மூலம் வாய் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தின் கீழ் தேசிய தகவலியல் மையம் இதற்கான மென்பொருளை உருவாக்கி பராமரித்து வருகிறது.

புற்றுநோய் உள்ளவர்களை கண்டறிய, சந்தேகத்திற்குரிய பகுதிகளை கையடக்க சாதனம் மூலம் பல் மருத்துவருக்கு இணையம் வாயிலாக அனுப்பப்பட்டு நோய் உள்ளதா என கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வாய் புற்றுநோய் கண்டறியும் திட்டம்;  கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்  நிறுவப்பட்டுள்ள எக்ஸ்ட்ரா கார்ப்பொரியல் ஷார்ட் வேவ் லித்தியோடிரிப்ஸி மருத்துவக் கருவி, தேனி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி, கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் நிறுவப் பட்டுள்ள சி.டி. ஸ்கேன், என 21 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவக் கருவிகளின் சேவையை  துவக்கி வைத்தார்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.