அரசின் நலத்திட்ட உதவிகள் :முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

அரசின் நலத்திட்ட உதவிகள் :முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

திங்கள் , நவம்பர் 30,2015,

 

முதலமைச்சர்செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் நலத்திட்ட உதவிகள், மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள லெட்சுமிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 218 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவியை அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார். மேலும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், 488 பயனாளிகளுக்கு வைப்புத் தொகையும், பள்ளி குழந்தைகளுக்கு கண்ணொளி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 382 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் திரு. ந. வெங்கடாசலம், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றுப் பேசினார். இக்கூட்டத்தில், அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு, மேயர் திரு. ராஜன்செல்லப்பா, திரு. ஆர். பார்த்திபன் எம்.பி., திரு. கோபாலகிருஷ்ணன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தருமபுரி மாவட்டத்தில், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியும், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த 900 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்கமும், திருமண நிதியுதவி என 4 கோடியே 34 லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. பி. பழனியப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. கே. விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கெங்கவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட 4 ஆயிரத்து 2 பயனாளிகளுக்கு, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 14 மாணவிகளுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

மதுரை மாநகரில், யாகப்பாநகர், யானைக்குழாய் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 289 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. செல்லூர் கே.ராஜு, மேயர் திரு. ராஜன் செல்லப்பா, திரு. கோபாலகிருஷ்ணன் எம்.பி., டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த குழந்தைகள் நல பாதுகாப்புப் பெட்டகத்தை, அமைச்சர் டாக்டர். எஸ். சுந்தரராஜ் வழங்கினார். அரசு மேல்நிலைப்பள்ளியில் 220 மாணவ-மாணவிகளுக்கு, விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, அரியான்கோட்டையில் இருந்து, பரமக்குடிக்கு புதிய வழத்தடத்தில் பேருந்து சேவையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியில், 178 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, புதிய குடும்ப அட்டை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவி உள்ளிட்டவற்றை அமைச்சர் திரு. N. சுப்பிரமணியன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவிகளை அமைச்சர் திரு. R.B. உதயகுமார் வழங்கினார். கோணம்பட்டி வழித்தடத்தில், புதிய பேருந்து சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சிவகாசி மற்றும் திருத்தங்கலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆயிரத்து 800 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை அமைச்சர் திரு. K.T. ராஜேந்திரபாலாஜி வழங்கினார். திரு. T. ராதாகிருஷ்ணன் எம்.பி., கலந்துகொண்டார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட 4,802 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாசலம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருச்சி மாவட்டம் புத்தூர், அக்ரஹாரம், சண்முகாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4,660 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் திரு. T.P. பூனாட்சி, அரசு தலைமைக் கொறடா திரு. R. மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 363 பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவியும், 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த 482 பெண்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 4 கிராம் தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. K.R. அர்ஜுனன், டாக்டர் சி. கோபாலகிருஷ்ணன், தாட்கோ தலைவர் திரு. எஸ். கலைச்செல்வன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதிகளில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள், பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தலைவர் திரு. தமிழ்மகன் உசேன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில், பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன.

திருநெல்வேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் 88 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.