அரசின் 25 சதவீத மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது

அரசின் 25 சதவீத மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சென்னையில் இன்று   நடைபெற்றது

வியாழன் , ஜனவரி 28,2016,

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளோர் அரசின் 25 சதவீத மூலதன மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தொழில் தொடங்குவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்படி, தொழில் தொடங்குவதற்கு 25 சதவீத அரசு மூலதன மானியத்துடன் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்று விண்ணப்பங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.