அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற்றிட 126 அரசு இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள்  எளிதாக பெற்றிட 126 அரசு இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

செவ்வாய், ஜனவரி 12,2016,

அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற்றிட சென்னையில் 126 அரசு இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தவும் இதர சேவை களை பெறும் வகையில் சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் இ–சேவை மையங்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்படும் என்று 2014-2015ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக 24.02.2014 அன்று தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் சென்னை மாநகரில் முன்னோடித் திட்டமாக 14 அரசு இ–சேவை மையங்கள், தமிழ்நாடு அரசு இ-சேவை வலைதளம், சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மின் மாவட்ட திட்டம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 126 கோட்ட அலுவலகங்களில் 1 கோடியே 95 லட்சத்து 54 ஆயிரத்து 948 ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 126 அரசு இ–சேவை மையங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத் தார்.
மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப்பெறும் அனைத்து அரசு இ–சேவை மையங்களில் பொதுமக்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியையும் துவக்கி வைத்தார்.

இ–சேவை மையங்களின் மூலம், பொதுமக்கள் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற வருவாய்த்துறையின் 16 சேவைகள், முதல்- அமைச்சரின் பெண் குழந்தை கள் பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் போன்ற சமூகநலத் துறையின் 13 சேவைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை தொடர்பான 6 சேவைகள், சென்னை மாநகராட்சியின் சார்பில் சொத்து வரி/தொழில் வரி செலுத்துதல், பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுதல் ஆகிய 4 சேவைகள், அரசின் இதர திட்டங்களான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுப் பணி தேர்விற்கு விண்ணப்பித்தல் போன்ற 54 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், இ–சேவை மையங் கள் மூலமாக பொதுமக்கள் தமிழ்நாடு மின்சார வாரியத் திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை ரொக்க மாக செலுத்தி ரசீதும் பெற்றுக் கொள்ளும் வசதி தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இ–சேவை மையங்கள் மூலம் இதர அரசுத் துறை களின் சேவைகளையும் பொதுமக்கள் பெற்றிட ஏதுவாக தக்க விரிவாக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் சேவைகளை தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே சிரமமின்றியும், விரைவாகவும் பெற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

நிகழ்ச்சியில், அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் ராமச்சந்திரன், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர் கள் கலந்து கொண்டனர்.