அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டம் – காலத்திற்கேற்ற மிகச் சிறப்பான திட்டம் என போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பாராட்டு

அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டம் – காலத்திற்கேற்ற மிகச் சிறப்பான திட்டம் என போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பாராட்டு

அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டம் காலத்திற்கேற்ற மிகச் சிறப்பான திட்டம் என்றும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையில் உருவான இத்திட்டம் மூலம் தங்களின் உடல்நலத்திற்கு உத்தரவாதம் கிடைத்திருப்பதாகவும் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த நாளில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில்கொண்டு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இப்பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டத்தை கொண்டு வந்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்திருக்கும் அரசு போக்குவரத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பணியாற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இங்கு வந்து முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளலாம். கட்டணமில்லாமல் இந்த மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. நாட்டிற்கே இத்திட்டம் முன்னோடியாக திகழ்கிறது என்றும், இது காலத்திற்கேற்ற மிகச்சிறப்பான திட்டம் என்றும் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வரும்முன் காப்போம் என்ற முதுமொழிக்கேற்ப, இந்த முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் ஓட்டுநர்களின் உடல் நலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கிறது என்றே உறுதியாக சொல்லலாம்…