அரியலூர் மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கை ; பொதுமக்கள் மகிழ்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கை ; பொதுமக்கள் மகிழ்ச்சி

திங்கள் , நவம்பர் 21,2016,

வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில்கொண்டு, அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் மழைக்கால தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சுகாதாரத்துறை, அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேங்கிய குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகளில் கொசு மருந்து தெளித்தல், சாக்கடை நீரை வெளியேற்றுதல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அரியலூர் மாவட்டத்திலும் பல இடங்களில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகள் தோறும் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  குறித்து எடுத்துக் கூறி வருகின்றனர்.

மேலும், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றுதல், நீர்நிலைப் பகுதிகளில் கொசு மருந்து தெளித்தல், வடிகால் வாய்க்கால்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.