அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

ஆகஸ்ட் 30, 2017 ,புதன்கிழமை,

சென்னை : அர்ஜுனா விருது பெற்ற மாரியப்பன் உள்ளிட்ட தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு, முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், ‘2016-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள தங்களுக்கு அர்ஜுனா விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இடையூறுகளைத் தாண்டி வெற்றிகள் பல பெற்று சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும், தாங்கள் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறீர்கள்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல அர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களான ஆரோக்கிய ராஜீவ், அமல்ராஜ் ஆகியோருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.