அறிவியலிலும் அரசியல் செய்யும் ஸ்டாலின் :திமுகவை விளாசும் விவசாயிகள்!

அறிவியலிலும் அரசியல் செய்யும் ஸ்டாலின் :திமுகவை விளாசும் விவசாயிகள்!

வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016,

நமக்கு நாமே பயணத்தின்போது தஞ்சாவூர் அருகே அரசூரில் உள்ள ஒரு வயலில் இறங்கி நெல் நாற்றினை நடவு செய்தார் ஸ்டாலின். தற்போது அந்த வயலில் அறுவடை நடைபெற்ற நிலையில்,..ஸ்டாலின் கைராசியால் வழக்கத்தைவிட அதிக மகசூல் கிடைத்திருக்கிறது’ என்று பிரசாரம் செய்து வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள்.

ஊரில் சில விவசாயிகளிடம் இதைப் பற்றி விசாரித்தோம். போன வருஷம் ஏக்கருக்கு 45 மூட்டை மகசூல் எடுத்தவர்தான். இந்த வருஷம் 40 மூட்டை மகசூல்ங்கிறதே குறைவானதுதான். கொஞ்சம் கூட மழை பாதிப்பு இல்லாம இருந்திருந்தா இவருக்கு மட்டுமில்ல… எங்களுக்கும்கூட இந்த வருஷம் 45 மூட்டை மகசூல் கிடைச்சிருக்கும். இதுல அதிசயம் ஒண்ணுமில்ல. ஆனா, விவசாயத்தைக் கூட அரசியலாக்கி பூதாகரப்படுத்துறாங்க’’ என்றார்கள்.

இதுகுறித்து பேசிய திருவையாறு விவசாயிகள் சங்க தலைவர் சுகுமாறன், ‘‘ஒருவேளை இது உண்மையாக இருந்தால், அவரை எல்லா விவசாயிகளின் நிலங்களுக்கும் அழைத்துச் சென்று நாற்று நடவு செய்யலாமே. எங்கள் பகுதியில் உள்ள பத்து விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து ஸ்டாலினுக்கு விமான டிக்கெட் எடுத்துதர தயாராக இருக்கிறோம். அவரை வரச்சொல்லுங்கள்.

முற்போக்கு, முடநம்பிக்கை ஒழிப்பு என்றெல்லாம் பேசி வளர்ந்த திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்தவர்கள், அறிவியல்பூர்வமான இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் கைராசி என்றெல்லாம் கூறி அரசியல் செய்வது அபத்தமானது, கேலிக்கூத்தானது. இதை ஸ்டாலினே அழைத்து கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.

ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லும் நிலைக்கு தி.மு.க தள்ளப்பட்டுவிட்டது.