கருணாநிதி ஒரு இனத்துரோகி: வைகோ குற்றச்சாட்டு

கருணாநிதி ஒரு இனத்துரோகி: வைகோ குற்றச்சாட்டு

சனி, ஜனவரி 30,2016,

திமுக தலைவர் கருணாநிதி ஒரு இனத்துரோகி என்றும், திமுகவுடன் மதிமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈழ விடுதலைக்காக குரல் எழுப்பி சென்னையில் தீ குளித்து உயிரிழந்த முத்துக்குமாரின் நினைவு அஞ்சலி கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை வைகோ சுட்டிக்காட்டினார்.

அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தும், தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக தலைவர் கருணாநிதி ஒரு இனத்துரோகி என வைகோ விமர்சித்தார். திமுகவுடன் மதிமுக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கூட்டணி வைக்காது என்றும் வைகோ குறிப்பிட்டார்.