அ.இஅ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பில் பா. நாராயண பெருமாள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.இஅ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பில் பா. நாராயண பெருமாள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , பெப்ரவரி 08,2016,

அ.இஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சர்  ஜெயலலிதா, கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில், ராதாபுரம் ஒன்றியக்கழகச் செயலாளர் திரு. பா. நாராயண பெருமாளை நியமித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும், ராதாபுரம் ஒன்றியக்கழகச் செயலாளருமான திரு. பா. நாராயண பெருமாளை இன்று முதல் நியமிப்பதாகத் தெரிவித்துள்ளார். கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் முதலமைச்சர்  ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை அறிந்த திரு. பா. நாராயணபெருமாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதாவை, இன்று  நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.