அ.இ.அ.தி.மு.கவில் இணைந்து கழகப் பணியாற்றிட, கேரள மக்கள் ஆர்வம் – உறுப்பினர் படிவங்களைப் பெற்று, கழகத்தில் இணைய முனைப்பு

அ.இ.அ.தி.மு.கவில் இணைந்து கழகப் பணியாற்றிட, கேரள மக்கள் ஆர்வம் – உறுப்பினர் படிவங்களைப் பெற்று, கழகத்தில் இணைய முனைப்பு

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தலைமையின் கீழ், கழகப் பணியாற்றிட, கேரள மக்கள் ஆர்வம் பூண்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.க.வில் இணைய அம்மாநில மக்கள் ஏராளமானோர் உறுப்பினர் படிவங்களை பெற்றுச் செல்கின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த சிறப்பான திட்டங்களால், பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை, அ.இ.அ.தி.மு.க.விற்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், அந்தமானிலும், அ.இ.அ.தி.மு.க. வேறூன்றி விட்ட நிலையில், கேரளாவில் ஏராளமானோர் அ.இ.அ.தி.மு.கவை ஆதரிக்கத் தொடங்கி விட்டனர். கேரள உள்ளாட்சித் தேர்தலிலும் கழகத்தைச் சேர்ந்த 6 பேரை மகத்தான வெற்றி பெறச் செய்தனர்.

இந்நிலையில், கேரளா முழுவதும் அ.இ.அ.தி.மு.கவிற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், இடுக்கி மாவட்டம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க கொடியேற்றி உறுப்பினர் படிவம் பெற்று தங்களை கழகத்தில் இணைத்து வருகின்றனர்.

இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே உள்ள பட்டுமலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, பீர்மேடு, ஏலப்பாறை, பள்ளிக்குன்னு, பட்டுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், உறுப்பினர் படிவங்களை ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், இடுக்கி மாவட்டச் செயலாளர் திரு. சுப்புராயன், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சிவகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.