அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

வியாழன் , மே 26,2016,

திருவள்ளூர், சென்னை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. R. ராஜன், தென்சென்னை தெற்கு மாவட்டம், சைதாப்பேட்டை பகுதி அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. T.K. சரவணன், கடலூர் மேற்கு மாவட்டம், மங்களூர் ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி திரு. தங்க. கொளஞ்சி, சேலம் புறநகர் மாவட்டம், ஜலகண்டபுரம் பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர் திரு. N. கருணாகரன் ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியக் கழக அவைத் தலைவரும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான திரு. M. குணாளன் சாலை விபத்தில் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். அன்புச் சகோதரர்கள் திரு.ராஜன், திரு. சரவணன், திரு.கொளஞ்சி, திரு. கருணாகரன் மற்றும் திரு. குணாளன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர்  ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.