அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் கழக நிர்வாகிகள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உற்சாக உரை

அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் கழக நிர்வாகிகள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உற்சாக உரை

புதன், பெப்ரவரி 10,2016,

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் வகையில், கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என, சென்னையில் நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த முதலமைச்சர்  ஜெயலலிதா, கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அமைச்சர்கள் திரு. ஆர். வைத்திலிங்கம், திரு. ஆர். காமராஜ், திரு. S.P. சண்முகநாதன், திரு.முக்கூர் என். சுப்பிரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை முதலமைச்சர்  ஜெயலலிதா இன்று நடத்தி வைத்து பேருரை ஆற்றினார்.

நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற விவேகானந்தரின் பொன்மொழியை நினைவுகூர்ந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், அடுத்தவர் இயல்பை புரிந்துகொள்ள வேண்டும் என மணமக்களுக்கு சுட்டிக்காட்டினார்.

அரசியலில் தந்தையைக் கூட நம்பக்கூடாது என்று முடிவெடுத்து, நமக்கு நாமே என்று பயணப்பட்ட மகனின் கதையை சுவைபட எடுத்துரைத்த முதலமைச்சர்  ஜெயலலிதா, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறும் வண்ணம் கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொண்டார்.