அ.இ.அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு தொண்டர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும்:தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் ஜெயலலிதா எழுச்சி உரை

அ.இ.அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு தொண்டர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும்:தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் ஜெயலலிதா எழுச்சி உரை

புதன், ஜனவரி 13,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று, தலைமைக் கழகத்தில், விழுப்புரம் தெற்கு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கழக அலுவலகங்களையும், அங்கு நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைகளையும் திறந்து வைத்து எழுச்சியுரையாற்றினார்.

தொண்டர்களிடையே பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-

இந்த புதிய ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக, 6 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகங்களையும், அவை அமைந்துள்ள வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைகளையும் திறந்து வைக்கும் இனிய நிகழ்ச்சி நடைபெறுவதில் தமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்தார். சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. அடையப்போகும் மகத்தான வெற்றிக்கு முன்னோடியாக இன்றைய நிகழ்ச்சி அமைந்துள்ளதாகவும், அத்தகைய வெற்றியினை அடைந்திட கழகத்தினர் அனைவரும் முழு ஈடுபாட்டோடு தேர்தல் பணியாற்றிடவேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.