அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து ஒரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து ஒரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ஆகஸ்ட் 20 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை, 

சென்னை : அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.

அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை கீரின்வேஸ்ரோட்டில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் பகல் 1-20 மணிவரை இந்த ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மா.பா.பாண்டியராஜன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

இணைப்பு பற்றிய பேச்சு வார்த்தை சரியான வழியில் நடைபெற்று வருகிறது. ஒரிரு நாளில் நல்ல முடிவு எட்டபடும். எங்கள் அணி்யில் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. குழப்பமும் இல்லை, இரு அணிகளின் இணைப்பு தமிழக மக்கள் மற்றும் தொண்டர்கள் விருப்பம்படியே நடைபெறும் என்று கூறினார்.