அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஆகஸ்ட் 20 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை, 

திருவாரூர் : அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் என்று திருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட அவர் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். திருவுருவ படத்தையும் திறந்து வைத்த அவர். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண்ணை இமை காப்பது போல காத்து, தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னுடைய ஆட்சியில் ஏராளமான திட்டங்களையும், நலன்களையும் அளித்திருக்கிறார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை, அம்மா சிறப்பாக வழிநடத்தி சென்றார். தற்போது இந்த இயக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.  அது இப்பொழுது பேச்சுவார்த்தையின் மூலமாக சரிசெய்யப்பட்டு விரைவில் இரு பிரிவுகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.