அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் அறிவிப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் அறிவிப்பு

புதன், மார்ச் 02,2016,

கடந்த, 18 ஆண்டுகளாக நாங்கள், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வருகிறோம். இனியும், அந்த கூட்டணியிலேயே, தொடர்ந்து இணைந்திருப்போம்.ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் பொருளாதாரத்தில் தமிழகம், இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.கடந்த, ஐந்து ஆண்டுகளில் மட்டும், தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக, 86 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, சட்ட ரீதியாக தீர்வு கண்டிருக்கிறார்.எனவே, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., சேர்ந்தாலும், அந்த கூட்டணியில் தான் நாங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம்; வெற்றி பெறுவோம்.என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார்.