விருத்தாசலத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணி:அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார்

விருத்தாசலத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணி:அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

விருத்தாசலத்தில் அ.தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

அ.தி.மு.க.வின் கடலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணி விருத்தாசலத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட பேரவை செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரசெயலாளர் கலைச்செல்வன், நகரசபை தலைவர் அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், முனுசாமி, பச்சமுத்து, மங்கலம்பேட்டை பேரூராட்சி செயலாளர் நூர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனை விளக்க பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. அப்போது அ.தி.மு.க.வினர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வரும் சாதனைகள் குறித்த புத்தகங்களை பொது மக்களிடம் வழங்கினர்.

இதில் நகரசபை துணை தலைவர் சந்திரகுமார், மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் அருள்குமார், டாக்டர் தெய்வசேதுபதி, மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், நகர பாசறை செயலாளர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேல்முருகன், பாலதண்டாயுதம், முல்லைநாதன், காசிநாதன், மற்றும் ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.