அ.தி.மு.க. சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்: 24–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடக்கிறது

அ.தி.மு.க. சார்பில் முதல்வர்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்: 24–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடக்கிறது

வியாழன் , பெப்ரவரி 18,2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 24-ம் தேதிமுதல், 28-ம் தேதிவரை, 5 நாட்கள் முதலமைச்சரின் 68-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவின் 68–வது பிறந்தநாளை முன்னிட்டு, 24–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை 5 நாட்கள் ‘ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள்’ அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி அதன் விபரங்களை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் தம்பிதுரை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் விவரம் வருமாறு:–

24–ந்தேதி

* ஆர்.கே.நகர்– பாத்திமா பாபு, ஆரணி கே.அன்பழகன்.

* தாம்பரம்– அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர் டி.கே.எம்.சின்னையா

* விருகம்பாக்கம்– அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி.

* சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி– அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன்.

* ராயபுரம்– அமைப்பு செயலாளரும், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவருமான விசாலாட்சி நெடுஞ்செழியன், டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ.,

* ஆயிரம் விளக்கு– அமைச்சர் பா.வளர்மதி.

* அண்ணாநகர்– அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி.,

* காஞ்சீபுரம்– அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், நடிகர் ராமராஜன்.

* திருவள்ளூர்– அமைச்சர் பி.வி.ரமணா, நடிகர் மனோபாலா.

* ஆவடி– அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், நாஞ்சில் சம்பத், சிந்தை ஆறுமுகம்.

* ஆலந்தூர்– நடிகர் அஜய் ரத்னம், எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி.

* புழல் ஒன்றியம்– கனல் கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் எஸ்.சிவா.

25–ந்தேதி

* மதுரவாயல்– அமைச்சர் பா.வளர்மதி, புலவர் மா.குழந்தைசாமி.

* மயிலாப்பூர்– அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, ஆவடிக்குமார்.

* பெரம்பூர்– அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, கோவை புரட்சித்தம்பி.

* திருவொற்றியூர்– சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளரும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான ஜே.சி.டி.பிரபாகர் எம்.எல்.ஏ., நடிகர் அஜய்ரத்னம்.

26–ந்தேதி

* கொளத்தூர்–வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், அ.தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான ஏ.நவநீதகிருஷ்ணன் எம்.பி., நள்ளாற்று நடராசன்.

* எழும்பூர்– மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம்.

* அம்பத்தூர்– எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.அலெக்சாண்டர், கே.என்.ராமச்சந்திரன் எம்.பி., கடலூர் கே.முருகுமணி.

* தியாகராயர்நகர்– அமைச்சர் பி.வி.ரமணா, நாஞ்சில் சம்பத்.

* வேளச்சேரி– தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி, டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., ஆர்.தர்மராஜன்.

27–ந்தேதி

* மாதவரம்– அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி.

* திரு.வி.க.நகர்– சிறுபான்மையினர் நல பிரிவு துணை செயலாளரும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான ஜே.சி.டி. பிரபாகர் எம்.எல்.ஏ., டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்.பி., பாத்திமா பாபு.

*வில்லிவாக்கம்– தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தின் தலைவர் விருகை வி.என்.ரவி, மொடக்குறிச்சி என்.சரஸ்வதி.

28–ந்தேதி

*சைதாப்பேட்டை– தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, மொடக்குறிச்சி என்.சரஸ்வதி.