அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட் -அவுட்டுகள் இல்லை,முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்கள் பாராட்டு

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட் -அவுட்டுகள் இல்லை,முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்கள்  பாராட்டு

ஞாயிறு, ஜூன் 19,2016,

பொதுவாக அரசியல் விழாக்களாக இருந்தாலும் சரி, அரசு விழாவாக இருந்தாலும் சரி, பிறந்தநாள் விழாக்களாக இருந்தாலும் சரி, கோவில் விழாக்களாக இருந்தாலும் சரி அண்மை காலங்களில் எங்கு பார்த்தாலும் ‘கட்-அவுட்டுகள்’ வைக்கப்படுவது வழக்கம். 
ஆனால், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்ற விழாவின் போது முதன் முதலில் ‘கட்- அவுட்டுக்கு கெட் அவுட்’ சொல்லப்பட்டது. 
அதே போன்று, நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்க வாழை மரம், தோரணங்கள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்த போதிலும், ‘கட்- அவுட்டுகள் வைக்கப்பட வில்லை.
இதை பார்த்து பொதுமக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பெரிதும் பாராட்டினர்.