அ.தி.மு.க செயற்குழு-பொதுக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி கூடுகிறது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க செயற்குழு-பொதுக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி கூடுகிறது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , டிசம்பர் 21,2015,

சென்னை :  அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி கூடுகிறது. இத்தகவலை கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 31.12.2015 வியாழக் கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில்,  கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.  கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.  உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகம் மழை வெள்ளத்தால் வரலாறு காணாத சேதங்களை சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தமிழகம் துயரத்தில் இருந்து மீண்டுள்ளது. தொடர்ந்து நீவாரண பணிகல் நடந்து வருகின்றன. நிவாரண பணிக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.2000 கோடி வழங்க வேண்டும் என்று தன்னைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் அதிமுக செயற்குழு வரும் 31ம் தேதி கூடவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.