அ.தி.மு.க பொதுச் செயலாளர் நியமன விவகாரம் : தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் நியமன விவகாரம் : தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில்

சனிக்கிழமை, மார்ச் 11, 2017,

சென்னை : அ.தி.மு.க பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 70 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சசிகலாவின் வழக்கறிஞர்கள் ராகேஷ் சர்மா, பரணி குமார் ஆகிய இருவரும் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர்.

தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், ”கட்சியின் பொதுக்குழுதான் என்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. அதிமுக தேர்தல் விதிகளுக்கு உட்பட்டே அனைத்து நியமனங்களும் நடைபெற்றுள்ளன. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் ஒப்புதலும் பெறப்பட்டது.

புகார் தெரிவித்தோர் எல்லாம் என்னை தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள். எனவே அதிமுக பொதுச் செயலாளர் நியமனத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை” என்று சசிகலா பதில் அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட பதில் கடிதத்தில் சசிகலாவின் கையொப்பம் இடம்பெற்றிருந்தது.