அ.தி.மு.க. வின் இரு அணிகளும் இணைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது : வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

அ.தி.மு.க. வின் இரு அணிகளும் இணைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது : வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

ஜூன் 04, 2017,ஞாயிற்றுகிழமை,

தஞ்சாவூர் : அ.தி.மு.க. வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் ஒட்டு மொத்த எண்ணம். இணைக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

தஞ்சை அருகே உள்ள கீழவேங்கை நாட்டில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் ஒட்டு மொத்த எண்ணம். இணைக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது உள்ள சூழலில் இணைப்பதற்கு வேண்டிய வழிவகைகளை செய்து வருகிறோம். கட்சியை இணைத்து இரட்டை இலையை மீட்டு கட்சியை பலப்படுத்த வேண்டிய ஆக்கப்பூர்வமான வேலையை செய்து வருகிறோம்.

இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.