முதல்வர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட, மகளிரணி சார்பில் 21 விருப்ப மனுக்கள்:இதுவரையில் 19,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்று சாதனை!

முதல்வர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட, மகளிரணி சார்பில் 21 விருப்ப மனுக்கள்:இதுவரையில் 19,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்று சாதனை!

செவ்வாய், பெப்ரவரி 02,2016,

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அந்த கட்சிகளில் விருப்ப மனுக்கள் குவிகின்றன.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து கடந்த 20–ந்தேதி முதல் பிப்ரவரி 3–ந்தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, அ.தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்தில், அவரது பெயரில் அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை விருப்பமனு செய்து வருகின்றனர்.

ஜெயலலிதா ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட, மகளிரணி சார்பில் நேற்று 21 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் இருந்து அன்றாடம் அ.தி.மு.க.வினர் விருப்பமனு செய்வதற்காக சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு உற்சாகமாக படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

அ.தி.மு.க.வில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை(புதன்கிழமை) மாலை 5.30 மணியுடன் முடிவடைய உள்ளது. எனவே இன்றும், நாளையும் விருப்பமனு தாக்கல் செய்வதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றுவரை 19 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்ப மனுக்கள் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.