அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

ஞாயிறு, அக்டோபர் 30,2016,

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர்களுக்கு, செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.கரூர் மாவட்ட அரவக்குறிச்சி தொகுதியில் கழக வேட்பாளர் திரு. V. செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக, கழக தேர்தல் பொறுப்பாளர்கள் திரு.எடப்பாடி K. பழனிசாமி, திரு. P.தங்கமணி, திரு.A. அன்வர்ராஜா எம்.பி., திரு.K.C. கருப்பணன், திரு.M.R. விஜயபாஸ்கர் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. M. ரெங்கசாமி, தஞ்சை மணிமண்டபம் அருகே பிரச்சாரத்தை துவக்கினார். அங்கிருந்த கடைகளுக்கு சென்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துக்கூறும் பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த 5 ஆண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனை திட்டங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். பிரச்சாரத்தின்போது, தஞ்சை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் திரு.R. வைத்திலிங்கம் M.P., அமைச்சர்கள் திரு.S.P. வேலுமணி, திரு.R.காமராஜ், திரு.O.S.மணியன், திரு.உடுமலை K.ராதாகிருஷ்ணன், டாக்டர். C. விஜயபாஸ்கர், திரு.R.துரைக்கண்ணு, திரு.G.பாஸ்கரன், திரு. ப.குமார் M.P. மற்றும் அமைச்சர்கள் திரு. வெல்லமண்டி நடராஜன், திருமதி. வளர்மதி, துணை சபாநாயகர் திரு. பொள்ளாச்சி வ. ஜெயராமன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. நவநீதகிருஷ்ணன், திரு. கு. பரசுராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. A.K. போஸை ஆதரித்து, கழகத்தினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். திருநகர், பூங்கா தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழக வேட்பாளரை ஆதரித்து, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களும், அமைச்சர்களுமான திரு. O. பன்னீர்செல்வம், திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், திரு. செல்லூர் K. ராஜூ, திரு. R.B. உதயகுமார், திரு. K.T. ராஜேந்திர பாலாஜி மற்றும் அமைச்சர்கள் திரு. பெஞ்ஜமின், திரு. K. பாண்டியராஜன், திருமதி. ராஜலட்சுமி, திரு. மணிகண்டன், திரு. கடம்பூர் ராஜூ மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் வீதிவீதியாகச் சென்று, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள கழக வேட்பாளருக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி கழக வேட்பாளர் திரு. ஓம்சக்தி சேகர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார். அவருக்கு ஆதரவாக, கழகத் தேர்தல் பொறுப்பாளர்கள் திரு.C.Ve. சண்முகம், திரு.M.C.சம்பத் மற்றும் திரு.செ.செம்மலை எம்.எல்.ஏ., அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் திரு.சொரத்தூர் இரா.ராஜேந்திரன், புதுச்சேரி மாநில கழகச் செயலாளர் திரு.பெ. புருஷோத்தமன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.