அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமியை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு

அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமியை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு

திங்கள் , நவம்பர் 07,2016,

தஞ்சை சட்டமன்றத்திற்கு வரும் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தொகுதி முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள், தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்து, மாதாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த தூயவளனார் தெரு, அந்தோணிசாமி தெரு, பழைய மாதாக்கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்திவரும் திட்டங்களையும், அரசின் சாதனைகளையும் விளக்கி பிரசுரங்களை வழங்கி வேட்பாளர் எம். ரெங்கசாமிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
பிரச்சாரத்தின் போது அமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை வழிநெடுகிலும் பொதுமக்களும், வாக்காளர்களும் ஆரத்தி எடுத்து வெற்றி திலகம் இட்டு வரவேற்றதோடு, முதல்வர் ஜெயலலிதா அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை என்றென்றும் மறக்க மாட்டோம். இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னமும் எங்களுக்கு தெரியாது என உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

மேலும் வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட 13 பூத்களுக்கு நியமிக்கப்பட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை வழங்கிய அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாக்கி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தஞ்சை தொகுதியில் செயல்படுத்தி உள்ள முதல்வர் ஜெலலிதாவின் சாதனைகளை வீடுதோறும் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இதனை தொடர்ந்து வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்குசேத்தி தெரு, ரெட்டிபாளையம் பிள்ளையார் கோவில் தெரு, விஜயநாயக்கன் தெரு, மூப்பனார் தெரு முதலான வார்டுகளில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாக்காளர்களை வீடு வீடாக சென்று சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டங்களில், புதுக்கோட்டை அ.தி.மு.க.செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான கு.வைரமுத்து உள்ளிட்ட அ.தி.மு.க.நிர்வாகிகளும், திரளான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.