ஆங்கிலவழிக் கல்வியை, அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனடைந்து வரும் மாணவ-மாணவிகள் நன்றி

ஆங்கிலவழிக் கல்வியை, அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனடைந்து வரும் மாணவ-மாணவிகள் நன்றி

சனி, மார்ச் 12,2016,

தனியார் பள்ளிகளில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்த ஆங்கிலவழிக் கல்வியை, ஏழை மாணவ-மாணவிகளும் எளிதில் பயிலும் வகையில் அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு இத்திட்டதால் பயனடைந்து வரும் மாணவ-மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இணையாக அனைத்து வகையான கல்வியறிவையும் பெறும் வகையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். பள்ளிப்படிப்பு முடிந்த பின்னர், அனைத்து வகையான கல்வியும், பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பதால், பள்ளிபருவத்திலேயே கற்றுக் கொடுக்கப்படும் ஆங்கிலவழிக் கல்வி தங்களுக்கு மிகுந்த பயனைத்தருவதாக மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் ஆங்கிலவழிக் கல்வியால் பொறியாளராகவும், மருத்துவர்களாகவும், பல்வேறு உயர்கல்விகளில் முதலிடம் பெற்று வந்த நிலை மாறி, தற்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர் அவர்களுக்கு நிகராக கல்வி பயின்று வேலைவாய்ப்புகளில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இத்திட்டதால் பயனடைந்து வரும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத தெரிவித்துக் கொண்டுள்ளனர்.