ஆந்திராவில் தமிழர்கள் விடுதலைக்கான தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் பரிசு:தமிழக அரசு வழக்கறிஞர்கள் பெருமிதம்

ஆந்திராவில் தமிழர்கள் விடுதலைக்கான தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் பரிசு:தமிழக அரசு வழக்கறிஞர்கள் பெருமிதம்

வியாழன் , பெப்ரவரி 25,2016,

ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பரிசாக சமர்பிப்பதாக, தமிழக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து இலவச சட்ட உதவி கோரும் மனுக்களை பெறும்படி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, 312 கோரிக்கை மனுக்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களால் பெறப்பட்டு, அவை 29.10.2015 அன்று தலைமைச் செயலாளரால், மாநில சட்ட உதவி ஆணையம் மூலம், ஆந்திர மாநில சட்ட உதவி ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, ஆந்திர சிறைகளில் உள்ளவர்களை பிணையில் கொண்டுவர இரண்டு அரசு வக்கீல்கள் தலைமையில் வக்கீல் குழு ஒன்று ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கு ஏற்படும் செலவினை ஈடுசெய்ய முன்பணமாக ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலஅமைச்சர் ஜெயலலிதா 3.11.2015 அன்று உத்தரவு பிறப்பித்தார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, ஆந்திர சிறைகளில் இருந்த 172 தமிழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2013–ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சேஷாசல வனப்பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வன அலுவலர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 288 தமிழர்கள் மீது செம்மர கடத்தல் மற்றும் கொலைக்குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள 3–வது கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தன.

முதல்–அமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு வக்கீல்கள் முகம்மது ரியாஸ் மற்றும் அருள் ஆகியோர் தலைமையிலான வக்கீல் குழு திருப்பதியைச் சேர்ந்த வக்கீல்களுடன் இணைந்து இந்த வழக்குகளில் வாதிட்டனர்.

3.11.2015 முதல் 20 அமர்வுகளில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது திறமையான வாதங்களை இந்த வக்கீல்கள் எடுத்து வைத்தனர். இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 288 தமிழர்களும் இன்று (நேற்று) திருப்பதி 3–வது கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டனர்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவே, கொலை மற்றும் செம்மர கடத்தல் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகளை எதிர்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 288 அப்பாவித்தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பரிசாக சமர்பிப்பதாக, தமிழக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.